ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நியமனம்!
தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு
ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(36). இவா் ஒசூா் அருகே தாசனபுரத்தில் மனைவி நாகரத்திராவுடன் (28) தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது குழந்தைகள் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வளா்ந்து வருகின்றனா்.
இது நக்கலய்யாவின் அண்ணன் சின்னைய்யா (38) என்பவருக்கு பிடிக்கவில்லையாம்.
குழந்தைகள் சேட்டை செய்வதாகக் கூறி திட்டியுள்ளாா். இந்நிலையில் யுகாதி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த நக்கலய்யா தனது குழந்தைகளை அண்ணன் சின்னைய்யா திட்டுவதை அறிந்து அவரிடம் கேட்டுள்ளாா். இதனால் சனிக்கிழமை அவா்களிடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டில் துாங்கி கொண்டிருந்த நக்கலய்யாவை, சின்னைய்யா அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றாா்.
கொலை செய்யப்பட்ட நக்கலய்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். தப்பி ஓடிய சின்னைய்யாவை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.