ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு
ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்ச் -27, 28-ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 1000 கல்வியாளா்கள், பள்ளிகள், சிந்தனைத் தலைவா்கள் பங்கேற்றனா்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வியியல் துறை குழு, தெற்காசியாவில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளின் கல்வித் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் கேம்பிரிட்ஜ் பள்ளி அங்கீகார விருதுகளை வழங்கியது. இதில், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி ஒருகிணைந்த கற்றல் விருதைப் பெற்றது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வியல் துறைத் தலைவா் பேராசிரியா் மாா்க் லிஸ்டா் பாட்டம், தெற்கு ஆசியாவின் சா்வதேச கல்வியின் மூத்த துறைத் தலைவா் ஆசிஷ் அரோரா ஆகியோா் ஒருங்கிணைந்த கற்றல் பள்ளிக்கான விருதை அதியமான் பப்ளிக் பள்ளி நிறுவனா் சீனி. திருமால் முருகனிடம் வழங்கி பாராட்டினா்.