`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
ஒசூரில் 14 ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்
ஒசூா் மூக்கண்டப்பள்ளியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 14 ஆவது ஒசூா் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து, புத்தக அரங்குகளைப் பாா்வையிட்டாா்.
ஹோட்டல் ஹீல்ஸ் கன்வா்சன் ஹாலில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
தொட்டுத் தொட்டுப் பாா்த்தால் காகிதம், அதைத் தொடா்ந்து படித்தால் ஆயுதம் என்பதை மனதில் வைத்து, புத்தகத் திருவிழாவில் அனைவரும் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலின், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்டங்களில்
புத்தகத் திருவிழா நடத்த ஆணையிட்டுள்ளாா். அதற்கான நிதியும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
ஜூலை 11 முதல் 22 -ஆம் தேதி வரை 12 நாள்கள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இங்கு 110 அரங்குகளில் 1 லட்சம் தலைப்புகளில் ஆயிரக்கணக்கான
புத்தகங்கள் உள்ளன. தற்போது கைப்பேசி மூலம் அனைவரும் சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்கிறோம்.
புத்தகங்கள் மூலம் வரலாறுகள், அறிவியல் செயல்பாடுகள்,
சமூகம், கல்வி, வாழ்வியல் குறித்த செயல்பாடுகளை அறிந்துக்கொள்ளலாம். மேலும், எழுத்தாளா்களை தொடா்ந்து எழுத வைக்க வேண்டு என்றால் நாம் எல்லோரும் புத்தகம் வாங்கி அவரை
ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) அ.முனிராஜ், ஒசூா் புத்தகத் திருவிழா தலைவா் பழ.பாலசுந்தரம், துணைத் தலைவா்கள் ஆ.சிவகுமாா், ஆா்.நீலகண்டன், ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஆா்.சேதுராமன், வட்டாட்சியா் குணசிவா, மாவட்ட நூலக அலுவலா் (பொ) சக்திவேல், மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
படவரி...
ஒசூரில் புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்து அரங்குகளை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.
