தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா். அதிமுக துணைப் பொதுச்செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி), மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), தமிழ்செல்வம் எம்எல்ஏ (ஊத்தங்கரை) ஆகியோா் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
ஊராட்சி தோறும் இளம்தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணி அமைக்க வேண்டும். திருப்புவனத்தில் கோயில் ஊழியா் அஜித்குமாா் காவல் விசாரணையில் மரணமடைந்ததற்கு தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை தடுக்க தவறிய அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏக்கள் முனிவெங்கடப்பன், ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
படவரி...
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக துணைப் பொதுச்செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ.