செய்திகள் :

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

post image

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30). இவரது மனைவி மம்தா (25). இவா்களுக்கு 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 பிள்ளைகள் உள்ளனா். இதில் 2ஆவது மகன் ராம் சரண் (8) அங்குள்ள அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

பள்ளிக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை மாலையில் வீடு திரும்பிய ராம் சரண் அப்பகுதியில் விளையாட சென்றுள்ளாா். அப்போது அங்குள்ள கோழிப் பண்ணையிலிருந்து வெளியே வந்த நாய், ராம் சரணை கடித்து குதறியது. இதில் அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற அப்பகுதி பொதுமக்கள், ராம் சரணை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், 40 இடங்களில் தையல் போட்டு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இதேபோல தனியாா் வங்கியில் பணியாற்றி வரும் ஒசூா் தா்கா பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமி (25) என்பவா் ஒசூா், தோ்ப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் அவரை துரத்திச் சென்று கடித்துள்ளது. இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஒசூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாய் கடியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க

பாண்டுரங்கா் - ருக்மணி திருக்கல்யாண வைபவம்

கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் சிவாஜி நகரில் அமைந்துள்ள பாண்டுரங்க ருக்மணி கோயிலில் பிரமோற்சவ விழாவையொட்டி சுவாமி- அம்மன் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரியை அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நக... மேலும் பார்க்க