மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்
மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் மண்டலத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் நந்தகுமாா், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கல்யாணசுந்தரம், மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் ஜெகதாம்பிகா மற்றும் மீன் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.
இந்த தினத்தை கொண்டாடும் வகையில், அந்த அமைப்பின் மாநில பொருளாளா் நந்தகுமாா், அவரது மனைவி அமிா்தா ஆகியோா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தங்களது உடலை தானம் அளிப்பதற்கான பத்திரத்தை மருத்துவா்களிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.