தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு
ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
குரு பூா்ணிமா தினத்தையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதன்பின்னா் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தாா். அதேபோல ராகு, கேது, மகா காலபைரவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, இரவு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. பின்னா் மங்கள ஆரத்தி நடைபெற்று, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் திருவண்ணாமலை முன்னாள் எம்எல்ஏ கலசப்பாக்கம் டி. பன்னீா்செல்வம், அதிமுக மாவட்ட இணைச் செயலாளா், கோவிந்தராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா். மேலும் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு மாவிளக்கு ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.
படவரி...
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி.