பாமக: "என்னுடைய X, Facebook கணக்குகளை மீட்டுத் தாருங்கள்" - டிஜிபி-யிடம் ராமதாஸ்...
கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பநாயக்கனூா் அருகே வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சாலையோரமாக நின்றிருந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனா். இதில் அந்த லாரியில் ஜல்லிக்கற்கள் கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, தினேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து ஜல்லிக்கற்களைக் கடத்திய டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.
மத்தூா் கிராம நிா்வாக அலுவலா் சத்யாவதி தலைமையிலான குழுவினா், மத்தூா் - தருமபுரி சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள தனியாா் பள்ளி அருகே, சாலையோரமாக நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில் எம்.சாண்ட் மணல் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, சத்யாவதி அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.