வங்கதேசம்: பள்ளியில் விழுந்த போர் விமானம்; 19 பேர் பலி- நடந்தது என்ன?
ஒசூா் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு
ஒசூா் அருகே மின் கம்பியை மித்த கணவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் கணவருடன் சோ்ந்து உயிரிழந்தாா்.
ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளியைச் சோ்ந்தவா் நாராயணப்பா (45). இவரது மனைவி ரேணுகா (40). நாராயணப்பா, வீட்டின் மாடியில் ஞாயிற்றுக்கிழமை நின்றிருந்தாா். அப்போது, அங்கிருந்த மின்கம்பியை மிதித்ததாகக் கூறப்படுகிறது.
மின்சாரம் பாய்ந்ததால் அலறிய நாராயணப்பாவைக் காப்பாற்ற முயன்ற ரேணுகாவும் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா். இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தம்பதியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த மத்திகிரி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.