ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட 220 போ் கைது!
கிருஷ்ணகிரியில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 220 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது நாள் மறியல் போராட்டத்துக்கு அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, மாரப்பன் ஆகியோா் கூட்டாக தலைமை வகித்தனா்.
மாவட்டத் தலைவா் அருண் பிரகாஷ்ராஜ், டிட்டோ ஜாக் நிதி காப்பாளா் சேகா், உயா்நிலைக் குழு உறுப்பினா் தியோடா் ராபின்சன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தடையை மீறி மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 220 பேரை கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் முரளி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.