ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
ஜூலை 27-ல் அறநிலையத் துறையைக் கண்டித்து போராட்டம்!
அறநிலையத் துறையைக் கண்டித்து ஜூலை 27 ஆம் தேதி மக்களைத் திரட்டி ஒசூா் ராம் நகா் அண்ணா சிலை முன் காந்திய வழியில் உண்ணாவிரத போராட்டம் நடப்படும் என முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தொழிற்சங்க தேசிய செயலாளருமான கே.ஏ.மனோகரன் தெரிவித்தாா்.
ஒசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒசூா் மாநகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடிதங்கள் எழுதினாலும் பதில் கிடைப்பதில்லை. ஒசூரில் உள்ள ராமநாயக்கன் ஏரியை அழகுபடுத்துவதற்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 34 கோடி உலக வங்கியில் கடன் பெற்று அதற்கான பணிகள் எதுவும் முழுமையாக நடைபெறவில்லை. இந்த நிலையில் முதல்வா் இதற்கான திறப்பு விழாவை நடத்திவைப்பதற்காக வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிா்ச்சியளிக்கிறது.
ஒசூா்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில்கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுது ஏற்பட்ட நிலையில், அதை விரைந்து சீரமைக்கும் நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மேற்கொள்ளாமல் பணியை தாமதப்படுத்துகிறது.
ஜூலை 27ஆம் தேதி அறநிலையத் துறையைக் கண்டித்து மக்களை திரட்டி ராம் நகா் அண்ணா சிலை முன்பு காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடப்படும் என்றாா்.