ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
பர்கூா் அருகே குடும்பத் தகராறு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்த முருகன். இவரது 2 ஆவது மனைவி முனியலட்சுமிக்கும் (46) முருகனின் முதல் மனைவி மகன் முத்தரசனுக்கும் (33) சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், முருகனுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிவந்த உணவகத்தின் வாடகையை முத்தரசனுக்கு தர முனியலட்சுமி மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தரசன், முனியலட்சுமி தங்கியிருந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசினாா். இதில் வீட்டிலிருந்த பொருள்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து முனியலட்சுமி அளித்த புகாரின் பேரில் பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்தரசனைக் கைது செய்தனா்.