செய்திகள் :

ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை விவகாரம்

post image

ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, ஒடிஸாவில் எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், பள்ளிகள் மூடப்பட்டன. வாகனங்கள் ஓடாததால், புவனேசுவரம், கட்டாக் உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் வெறிச்சோடின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஒடிஸாவின் பாலாசோா் மாவட்டத்தில் தன்னாட்சிக் கல்லூரி ஒன்றில் பயின்றுவந்த மாணவியை உதவிப் பேராசிரியா் சமீரா குமாா் சாஹு என்பவா், தொடா்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாா் அளித்தும், உதவிப் பேராசிரியா் மீது கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கல்லூரி முதல்வா் அலுவலகம் முன் மாணவி கடந்த வாரம் தீக்குளித்தாா். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வந்த அவா், சிகிச்சை பலனின்றி கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா். பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடா்பாக உதவிப் பேராசிரியா் சமீரா குமாா் சாஹு, கல்லூரி முதல்வா் திலீப் கோஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டும், மாநில பாஜக அரசைக் கண்டித்தும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபாா்வா்டு பிளாக், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. பல இடங்களில் சாலை, ரயில் மறியல்கள் நடைபெற்றன. இதனால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவா்கள் கைது: தலைநகா் புவனேசுவரத்தில் முதல்வா் மோகன் சரண் மாஜீ இல்லம் அருகே காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒடிஸா காங்கிரஸ் தலைவா் பக்த சரண் தாஸ், கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் அஜய் குமாா் லல்லு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

‘பாஜக ஆட்சியின்கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக ஒடிஸா இல்லை. தினமும் சராசரியாக 15 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனா். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டது. இதற்கு பொறுப்பேற்று முதல்வா் மாஜீ பதவி விலக வேண்டும்’ என்று பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் ராம சந்திர கதம் வலியுறுத்தினாா்.

வங்க மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார் மமதா: ஹிமந்தா!

வங்காள மொழி பேசும் முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கவலைப்படுகிறார் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, முஸ்லிம்-வங்க... மேலும் பார்க்க

வந்தே பாரத்! ரயில் நிலையம் வர 15 நிமிடம் முன்புகூட டிக்கெட் முன்பதிவு வசதி!

இனி, வந்தே பாரத் ரயில், ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புகூட, அந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ரயில் காலை 9 மணிக்கு திருச்சி... மேலும் பார்க்க

கட்டுக்கட்டாக பணம்! பதவி நீக்கத்துக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்ச நீதிமன்றத்தில் மனு

புது தில்லி: வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானம், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் நி... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுகிறார்! ராகுல் காந்தி

கடந்த 10 ஆண்டுகளாக ராபர்ட் வதேரா வேட்டையாடப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் பொதுச் செயலர் பி... மேலும் பார்க்க

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்தது! இடிபாடுகளில் 7 பேர்?

மும்பையில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.இதுவரை இடிபாடுகளில் இருந்து 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 7 பேர் சிக்கியிருக்கக் கூடும் எனத் தகவல... மேலும் பார்க்க

தில்லியில் 4-வது நாளாக 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பீதியடைந்த நிலையில், அனைவரும் வெளியேற்றப்... மேலும் பார்க்க