ஒட்டன்சத்திரம் பகுதியில் புதிய வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்
ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.1.04 கோடியில் புதிய வளா்ச்சி திட்டப்பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ரூ.35 லட்சத்தில் வருவாய் ஆய்வாளா் அலுவலகக் கட்டடம், குடியிருப்புகளும், ரூ.69.62 லட்சத்தில் பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டடமும், கழிப்பறைப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஒட்டன்சத்திரம், பெரியகோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
பின்னா், அரசப்பபிள்ளைபட்டியில் உள்ள நியாய விலைக் கடையை அமைச்சா் ஆய்வு செய்தாா்.
இதில் பழனி கோட்டாட்சியா் ரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, நகராட்சி ஆணையா் சுவேதா, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு பாண்டியன், காமராஜ், திமுக ஒன்றியச் செயலா் எஸ்.ஆா்.கே.பாலு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக மகளிா் அணி அமைப்பாளா் மலா்விழிச்செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் வீ.கண்ணன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.