செய்திகள் :

ஒன் பை டூ!

post image
நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“எங்கள் தலைவர் சொல்லியிருப்பது உண்மைதானே... இந்த தி.மு.க அரசு, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து மக்களைக் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. மது விற்பனையில் இல்லாத பித்தலாட்டத்தையெல்லாம் செய்து, பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதையும் அமலாக்கத்துறை கண்டறிந்திருக்கிறது. இந்த ஊழல் அரசைக் கண்டித்து மக்களுக்காக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறது பா.ஜ.க. அந்தப் போராட்டத்துக்குத் துணை வராத த.வெ.க., போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும்விதமாகப் பேசுகிறது. இப்படிப் பேசுவதிலிருந்தே அந்தக் கட்சி, தி.மு.க-வின் ஊழல் குற்றங்களை மடைமாற்றவும், மீண்டும் தி.மு.க-வே ஆட்சியமைக்க மறைமுகமாக உதவுவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சிதான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது. மக்கள் பிரச்னைக்காக ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும்போது, அதை விமர்சிப்பது அபத்தமானது. அதேபோல, தமிழகத்தில் த.வெ.க வளர்ந்திருக்கிறது என்று அவர்களைத் தவிர வேறு யாரும் சொல்லவில்லை. தேர்தலைச் சந்திக்காமல் வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் செய்பவர்களுக்கு மக்களின் வலியும் வேதனையும் எப்போதும் புரியாது!”

ராஜ்மோகன்

ராஜ்மோகன், கொள்கை பரப்புச் செயலாளர், த.வெ.க

“கண்ணியமும் நிதானமும் தவறிப் பேசுகிறார் அண்ணாமலை. அரசியலுக்கு வரும்போதே எங்களின் கொள்கை எதிரி பா.ஜ.க., அரசியல் எதிரி தி.மு.க என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டோம். தமிழக வெற்றிக் கழகம் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தமிழகத்தில் அசுர வேகத்தில் வளர்ந்துவருகிறது. இந்த நிலையில், ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில் குறைந்தபட்ச அரசியல் அறத்தோடு பேச வேண்டும் அண்ணாமலை. ‘இடுப்பைக் கிள்ளுவது’ என்று ஒரு துறையையே கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. அவர் கட்சியிலுள்ள ஹேமாமாலினி, கங்கனா ரனாவத் தொடங்கி நடுராத்திரியில் யோசனை தோன்றி பா.ஜ.க-வில் இணைந்த சரத்குமார் வரையிலாக, சினிமா நடிகர்கள் பலரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே எங்களைப் பற்றிப் பேசுகிறார் அண்ணாமலை. `டி.எம்.கே ஃபைல்ஸ்’ தொடங்கி டாஸ்மாக் ஊழல் போராட்டம் வரை தி.மு.க-வுக்கு எதிராக வாய்கிழியப் பேசுவார். ஆனால், அடுத்த வாரத்திலேயே அந்தக் குற்றச்சாட்டு அனைத்துமே காணாமல்போய்விட்டதுபோல நடந்துகொள்வார். உண்மையில், தி.மு.க-வும் பா.ஜ.க-வும்தான் கள்ளக் கூட்டணி அமைத்துக்கொண்டு நாடகமாடி மக்களை ஏமாற்றிவருகின்றன!”

கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி; வெளியேறிய அமைச்சர்

கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் வேலை நடைபெற்ற வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்கள... மேலும் பார்க்க

`தெற்கின் மேல் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு...' - உகாதி வாழ்த்துச் செய்தியில் முதல்வர்!

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கான புத்தாண்டு விழாவான உகாதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.முதல்வரின் Ugadi வாழ்த்து செய்தி:-திராவிட மொழ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து செங்கோட்டையன்; டெல்லிக்குப் படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பல சிக்கல்களால், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

தவெக: "அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து இன்று பேசியிருக்கிறார். அப்போது, "நேற்று( மார்ச் 28) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பொதுமக்... மேலும் பார்க்க

'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

`இந்தநாடு நகைச்சுவை உணர்வை இழந்துவிட்டதா?’ - குனால் கம்ரா, ஷிண்டே சர்ச்சை | என்ன பிரச்னை?

மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஹாட் டாபிக், நகைச்சுவை கலைஞர் குனால் கம்ராவை சுற்றி நடக்கும் விஷயங்கள் தான். ஸ்டாண்ட் அப் காமெடியன் (standup comedian) குனால் கம்ரா, சமீபத்தில் நடைப்பெற்ற காமெடி ஷோ ஒன... மேலும் பார்க்க