மனிதநேயம்..! மியான்மர் சென்றடைந்த 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள்!
ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஏப்.9 -இல் போராட்டம்
புதுவை மாநில போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஏப்.9- ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக புதுச்சேரி அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரியில் அதன் கௌரவத் தலைவா் எம்.பிரேமதாசன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2015- ஆம் ஆண்டு புதுவை சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் நியமிக்கப்பட்டனா்.
அவா்கள், கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனா்.
இதனால், அவா்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இதனால், பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படுவதாக வாக்குறுதிகள் அளித்தும், நிறைவேற்றப்படாமலே உள்ளன.
கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், ஏப். 9 -ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் போக்குவரத்து ஒப்பந்த ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்டோா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா் என்றாா்.