தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை!
ஒருநாள் சுற்றுலா பயண திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம்: சுற்றுலாத் துறை!
சென்னை, புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கான ஒருநாள் சுற்றுலா பயணத் திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம் என தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடைகாலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை, புதுச்சேரி, மாமல்லபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் மற்றும் சொகுசு கப்பல் தொகுப்புடனான சுற்றுலா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளில் 1 மணி நேரம் சவாரி மற்றும் ஞாயிற்றுகிழமை ஒன்றரை மணி நேரம் சவாரி செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி படகு சவரி செய்யவும், காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தொலைபேசி: 1800 425 1111, 044-2533 3333, 044-2533 3444 மற்றும் வாட்ஸ்ஆப் 75500 63121 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.