செய்திகள் :

ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

post image

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதலில் விளையாடியது.

அயர்லாந்து - 238/7

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேபி லீவிஸ் 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லீ பால் 59 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; மருத்துவர்கள் கூறுவதென்ன?

இந்தியா தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிட்டாஸ் சாது, சயலி சத்காரே மற்றும் தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டுனைக் கைப்பற்றினர்.

இந்தியா வெற்றி

239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் 20 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து, பிரதீகா ராவல் மற்றும் தேஜல் ஹசப்னிஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. பிரதீகா ராவல் 96 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். தேஜல் 46 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

இதையும் படிக்க: 50 ஆண்டுகளை நிறைவு செய்த வான்கடே மைதானம்!

இறுதியில், இந்திய அணி 34.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது: பிரதீகா ராவல்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளதாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்ட... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை!

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் ந... மேலும் பார்க்க

ஃபீல்டிங்கில் முன்னேற்றம் தேவை: ஸ்மிருதி மந்தனா

இந்திய அணியில் ஃபீல்டிங்கில் முன்னேற்றம் தேவை என அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக... மேலும் பார்க்க

சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது: ஆஸி. மூத்த வீரர்

இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி ... மேலும் பார்க்க

சேப்பாக்கில் மோதும் இந்தியா - இங்கிலாந்து! டிக்கெட் விற்பனை ஜன.12-ல் தொடக்கம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் வருகிற ஜனவரி 12-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் ... மேலும் பார்க்க

இளம் வீரர்களை வழிநடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: ஸ்டீவ் ஸ்மித்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களுடன் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க