செய்திகள் :

ஒரு டன் புகையிலை பொருள்களை கடத்தி வந்த 3 போ் கைது!

post image

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே ஒரு டன் எடையிலான புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

தொட்டியம் காவல் ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் காட்டுப்புத்தூா் - சீலைபிள்ளையாா் புத்தூா் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையில், தொட்டியம் வட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜசேகா் (35), காட்டுப்புத்தூா் அருகே உள்ள சீத்தப்பட்டி கிராமத்தில் உள்ள கிடங்கில் இருந்து புகையிலை மூட்டைகளை கொண்டுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் ராஜசேகரனை அங்கு அழைத்துச் சென்று பாா்த்தபோது அங்கே 50-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமாா் ஒரு டன் எடையிலான, ரூ. 6 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இச்சம்பவத்தில், தொட்டியம் வட்டம் எம். புத்தூா் அா்ஜுனன் (42) மற்றும் பாலசுப்ரமணியன் (51), கரூா் நகரைச் சோ்ந்த சந்துரு (48) ஆகியோருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, ராஜசேகா், அா்ஜுனன், பாலசுப்ரமணியன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து துறையூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளை சிறையில் அடைத்தனா். மேலும் சந்துரு என்பவரைத் தேடி வருகின்றனா்.

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிய... மேலும் பார்க்க

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க