3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்...
ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்... புச்சி பாபு தொடரில் சதமடித்த ருதுராஜ்!
புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான சதத்தினை பதிவு செய்துள்ளார்.
சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் காயம் காரணமாக 80 சதவிகித போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.
தற்போது, காயம் குணமாகிய அவர் புச்சிபாபு தொடரில் விளையாடி வருகிறார்.
மகாராஷ்டிர அணிக்காக விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் அசத்தலாக 122 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்களும் அடித்துள்ளார். இவரும் குல்கர்னியும் இணைந்து 220 ரன்கள் குவித்தார்கள்.
இறுதியில், ருதுராஜ் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணியில் நீண்ட நாள்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.