செய்திகள் :

`ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்ட 10 பேருக்கு HIV பாதிப்பு' - கேரளாவில் அதிர்ச்சி!

post image

கேரள எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டி கடந்த இரண்டு மாதங்களாக சர்வே ஒன்றை நடத்தியது. அதன் முடிவு வெளியிடப்பட்ட நிலையில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மலப்புறத்தில் ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்டுக்கொண்ட 10 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஹெச்.ஐ.வி

மலப்புறம் மாவட்டம் வளாஞ்சேரி பகுதியில் ஒருவருக்கு ஹைரிஸ்க் ஹெச்.ஐ.வி பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு போதை ஊசி செலுத்திக்கொள்ளும் வழக்கம் இருந்ததாகவும், அவருடன் சேர்ந்து ஒரே சிரஞ்ச் பயன்படுத்தி போதை ஊசி போட்டுக்கொண்ட மேலும் 9 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. பத்துபேரில் 3 பேர் வடமாநில தொழிலாளர்கள். மற்ற அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

ஹெச்.ஐ.வி பாதித்ததில் திருமணம் செய்துகொண்டவர்களும் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஹெச்.ஐ.வி பாதித்து ஹைரிஸ்க் நிலையில் உள்ளவர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்தினோம். அதன் அடிப்படையில் 10 பேருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை கண்டறிந்தோம். அவர்கள் ஒரே சிரஞ்சில் போதை ஊசி போட்டுக்கொண்டதன் காரணமாக ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஓரிடத்தில் சில சிரிஞ்சுகளியும் கண்டுபிடித்துள்ளோம். ஹெச்.ஐ.வி-க்கு சிகிச்சை உண்டு என்பதையும் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம்" என்றனர்.

போதை ஊசி

பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே சிரஞ்சை பலமுறை பயன்படுத்தி போதை ஊசி போட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹெச்.ஐ.வி பதிக்கப்பட்ட அனைவரும் சுகாதாரத்துறை கண்காணிப்பில் உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ, வேறு யாருக்கேனும் பாதிப்பு உள்ளதா என சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.சுபாஷ் சந... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர், கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் ... மேலும் பார்க்க

சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்க... மேலும் பார்க்க

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க

Karnataka Bank Theft: 'Money Heist' பார்த்து SBI வங்கியை கொள்ளை அடித்த மதுரை கும்பல் - பகீர் பின்னணி

மதுரையைச் சேர்ந்த விஜய்குமார், அஜய்குமார் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா தாவங்கேர் மாவட்டத்தில் இருக்கும் நியாமதி தலுகாவிற்கு பிழைப்புக்காகச் சென்று ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளனர். கட... மேலும் பார்க்க

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி

மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற... மேலும் பார்க்க