ஒரே நாளில் அதிரடி உயர்வு! தங்கம் விலை ரூ. 74 ஆயிரத்தைத் தாண்டியது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 22) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 9,015-க்கும், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 275 உயர்ந்து ரூ. 9,290-க்கும் சவரனுக்கு ரூ. 2,200-க்கு உயர்ந்து ரூ. 74,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டாலரின் மதிப்பைக் குறைக்க சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. இதனால், தங்கம் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் இந்நிலை நீடிக்கிறது.
இதனால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், விரைவில் தங்கம் விலை கிராம் ரூ. 10 ஆயிரத்தை தொடும் என நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
வெள்ளி விலையில் மாற்றமில்லை!
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ. 111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,11,000-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: அமெரிக்காவில் இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிப்பு! இந்தியாவுக்கு பாதிப்பா?