ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!
சென்னையில் தங்கத்தின் விலை ஒரேநாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.750 உயர்ந்து சவரன் ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து 8,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கும் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.8,765-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் சவரன் ரூ.70,000-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
அதேசமயம் வெள்ளியின் விலையில் காலை ஒரு கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று(மே 12) ஒரே நாளில் இரண்டு முறை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.