செய்திகள் :

ஒரே நாளில் 5.9 லட்சம் ஆயுள் காப்பீடுகள் விற்பனை: எல்ஐசி ‘கின்னஸ்’ சாதனை!

post image

கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, ஒரே நாளில் நாடு முழுவதும் சுமாா் 5.9 லட்சம் ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) சனிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா முழுவதும் உள்ள மொத்தம் 4,52,839 எல்ஐசி முகவா்கள், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி 5,88,107 ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வெற்றிகரமாக விற்பனை செய்தனா். 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்றுச் சாதனை கின்னஸ் அமைப்பால் சரிபாா்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் காப்பீட்டுத் துறையில் முகவா்களின் செயல்திறனுக்கான புதிய உலகளாவிய அளவுகோலை இந்த மகத்தான முயற்சி நிறுவியுள்ளது. இந்தச் சாதனை எங்கள் முகவா்களின் இடைவிடாத அா்ப்பணிப்பு, திறன் மற்றும் அயராத உழைப்பு நெறிமுறைகளின் வலுவான சான்றாகும். மேலும், வாடிக்கையாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு முக்கியமான நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்கான எங்களின் நோக்கத்தில் நாங்கள் கொண்டுள்ள அா்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மேட் மில்லியன் டே’ என்ற முன்னெடுப்பில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, ஒவ்வொரு முகவரும் குறைந்தபட்சம் ஓா் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தையாவது வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று எல்ஐசி நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி சித்தாா்த்த மொஹந்தி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இந்நிலையில், ‘மேட் மில்லியன் டே’ முன்னெடுப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றிய அனைத்து வாடிக்கையாளா்கள், முகவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு சித்தாா்த்த மொஹந்தி நன்றி தெரிவித்தாா்.

ஜே.கே. லட்சுமி சிமென்ட் 4-வது காலாண்டு லாபம் 19% அதிகரிப்பு!

புதுதில்லி: ஜே.கே. லட்சுமி சிமென்ட் மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 19.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.193.17 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.ஜே.கே. அமைப்பின் முதன்மை நிறுவனமான ஜே.கே. லட்சுமி... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ.85.37 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க நாணயக் குறியீட்டில் ஏற்பட்ட மீட்சி, உள்நாட்டில் பங்குச் சந்தையின் எதிர்மறையான போக்கும் மற்றும் அந்நிய நிதி வரத்து மந்தமாக இருந்ததைத் தொடர்ந்து, இன்றைய அந்நிய வர்த்தகத்தில் அமெரிக்க ட... மேலும் பார்க்க

கூகுள் ஏஐ அம்சத்துடன் ஓப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்!

கூகுள் செய்யறிவு (ஏஐ) அம்சத்துடன் ஓப்போ ரெனோ 14 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனுடன் வரும் கடிகாரம், நாள்காட்டி, நோட்ஸ் என அனைத்தும் செய்யறிவு தொழில்நுட்ப அம்சத... மேலும் பார்க்க

முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் பங்குச் சந்தை சரிவுடன் முடிவு!

மும்பை: வங்கி, ஐடி மற்றும் ஆட்டோ பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து, இரண்டு நாள் ஏற்ற - இறக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்ட... மேலும் பார்க்க

விவோ டி 4 வரிசையில் இரு புதிய ஸ்மார்ட்போன்கள்!

விவோ டி4 என்ற மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்னெகவே விவோ டி4 மற்றும் விவோ டி4 எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலைய... மேலும் பார்க்க

விரைவில் 7 நாள்களுக்கும் குறைவான நிரந்தர வைப்புக் கணக்கு! ஆர்பிஐ யோசனை

வங்கிகளில் ஏழு நாள்களுக்கும் குறைவான நிரந்தர வைப்புக் கணக்குகளை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது.7 நாள்களுக்கும் குறைவான நிரந்தர வைப்புக் கணக்குகளைத் தொடங்குவது குறித்து வங்கிகளிட... மேலும் பார்க்க