தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்வு
கூகுள் ஏஐ அம்சத்துடன் ஓப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்!
கூகுள் செய்யறிவு (ஏஐ) அம்சத்துடன் ஓப்போ ரெனோ 14 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளது.
இதன் மூலம் ஸ்மார்ட்போனுடன் வரும் கடிகாரம், நாள்காட்டி, நோட்ஸ் என அனைத்தும் செய்யறிவு தொழில்நுட்ப அம்சத்தில் பயன்படுத்தலாம்.
ஓப்போ ரெனோ 14 வரிசை ஸ்மார்ட்போன்கள் சீனாவில் ஏற்கெனவே அறிமுகமான நிலையில், ஜுலை மாத முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓப்போவின் ரெனோ வரிசை ஸ்மார்ட்போன்கள், நடுத்தர வர்க்கத்தைக் குறிவைத்து பட்ஜெட் அம்சத்துடன் மட்டுமே அறிமுகமாகிறது. இதனால் ரெனோ 14-ம் அந்த விலையடக்கத்திலேயே இருக்கும் எனத் தெரிகிறது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஓப்போ ரெனோ 14 வரிசை ஸ்மார்ட்போனில் ஜெமினி ஏஐ ஒருங்கிணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்காக கூகுள் நிறுவனத்துடன் ஓப்போ நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் அடிப்படை செயலிகளாக உள்ள கடிகாரம், நாள்காட்டி, நோட்ஸ் போன்றவற்றை செய்யறிவு அம்சத்துடன் இயக்கி பயனர்கள் அதிநவீன பயன்பாட்டை உணரலாம்.
6.74 அங்குலத்துடன் 1.5K திறன் கொண்ட திரை கொடுக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 8450 ஓஎஸ் இயங்குதளம் உடையது.
பிரீமியம் வேரியன்ட் ஸ்மாட்ர்போன்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும். ஆனால், பட்ஜெட் ஸ்மார்ட்போன் பட்டியலில் உள்ள ஓப்போ ரெனோ 14 வரிசையிலும் இது கொடுக்கப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரி திறனுடன் 80W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 200MP கேமராவுடன் புதுவரவாக 3 மொபைல்கள்! எதை வாங்கலாம்?
இதையும் படிக்க | விவோ டி 4 வரிசையில் இரு புதிய ஸ்மார்ட்போன்கள்!