விரைவில் 7 நாள்களுக்கும் குறைவான நிரந்தர வைப்புக் கணக்கு! ஆர்பிஐ யோசனை
வங்கிகளில் ஏழு நாள்களுக்கும் குறைவான நிரந்தர வைப்புக் கணக்குகளை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது.
7 நாள்களுக்கும் குறைவான நிரந்தர வைப்புக் கணக்குகளைத் தொடங்குவது குறித்து வங்கிகளிடம் மத்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை கேட்டிருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் வங்கிகள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.