கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான நேற்று (மே 26) காலை, வணிகம் தொடங்கியதும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.320 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,600க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 360 மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 8,995-க்கும் ஒரு சவரன் ரூ. 71,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஐந்தாவது நாள்களாக அதாவது மே 23ஆம் தேதி முதல் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.111 ஆகவே நீடிப்பது குறிப்பிடத்தக்கது.