விவோ டி 4 வரிசையில் இரு புதிய ஸ்மார்ட்போன்கள்!
விவோ டி4 என்ற மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
ஏற்னெகவே விவோ டி4 மற்றும் விவோ டி4 எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வரிசையில் இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் இந்திய சந்தைகளில் மிகப்பெரிய வணிகத்தைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய வரத்தாக விவோ டி அல்ட்ரா மற்றும் விவோ டி லைட் என்ற இரு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. இந்தியாவில் ஜுன் மாதம் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்களாக இதில் என்னென்ன இடம்பெறும் என்பது குறித்து காணலாம்.
சிறப்பம்சங்கள்
விவோ டி அல்ட்ரா மற்றும் விவோ டி லைட் ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 ஓஎஸ் அமைப்புடன் வருகின்றன. மேலும், இதனுடன் கட்டாயமாக செய்யறிவு தொழில்நுட்பத் திறனும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது விவோ எஸ் 19-ன் மறு உருவாக்கமாக தயாரிக்கப்பட்டது. (இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டுமே சந்தையில் உள்ளது). டெலிபோட்டோ கேமரா போன்ற சில அம்சங்கள் குறைக்கப்பட்டு இந்தியாவில் அறிமுகமானது.
இதேபோன்று இந்த ஆண்டு விவோ டி அல்ட்ரா அறிமுகமாகிறது. எனினும் இது விவோ எஸ் 20 ப்ரோ வகை ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 டிசம்பரில் விவோ எஸ் 20 ப்ரோ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கணிப்பின்படி, விவோ டி அல்ட்ரா மற்றும் விவோ டி லைட் ஸ்மார்ட்போன்கள் 6.67 அங்குலத் திரையுடன் 1.5K துல்லியத்தன்மை கொண்டதாக இருக்கும். திரையில் சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்படும். இதன் பேட்டரி அம்சமானது, 5500mAh என இருக்கலாம். 90W வேகமாக சார்ஜ் செய்யும் அம்சம் இணைக்கப்படும்.
இதையும் படிக்க | அதீத பேட்டரி திறனுடன் வெளியானது ஐகியூ நியோ 10 ஸ்மார்ட்போன்!