டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ.85.37 ஆக முடிவு!
மும்பை: அமெரிக்க நாணயக் குறியீட்டில் ஏற்பட்ட மீட்சி, உள்நாட்டில் பங்குச் சந்தையின் எதிர்மறையான போக்கும் மற்றும் அந்நிய நிதி வரத்து மந்தமாக இருந்ததைத் தொடர்ந்து, இன்றைய அந்நிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 27 காசுகள் சரிந்து ரூ.85.37 ஆக முடிந்தது.
ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை மற்றும் உற்பத்தி உற்பத்தி தரவு நாளை வெளியிடப்படவுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்த நிலையில், இந்த வார இறுதியில் அறிவிக்கப்படவுள்ள முதல் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்கள் குறித்தும் நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.15 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.11 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.45 ஐ தொட்ட நிலையில், முடிவில் 27 காசுகள் சரிந்து ரூ.85.37-ஆக முடிந்தது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 35 காசுள் அதிகரித்து ரூ.85.10-ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை!