ஓடிடியில் சங்கராந்திகி வஸ்துனம்!
தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டரான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் சங்கராந்தி வெளியீடாக ஜன. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ. 300 கோடி வரை வசூலித்து பெரிய பிளாக்பஸ்டர் படமானது.
இதில் நாயகனாக நடிகர் வெங்கடேஷ் டகுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி, மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதையும் படிக்க: நெருக்கமான, முத்தக் காட்சிகளில் நடிக்க விருப்பமில்லை: உன்னி முகுந்தன்
இந்த நிலையில், இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
