Orange Shark: ஆழ் கடலின் வண்ண அதிசயம்... விஞ்ஞானிகளுக்கே வியப்பூட்டிய ஆரஞ்சு சுற...
"ஓணம் பண்டிகைக்கான சிறப்பு விடுமுறை ரத்தா?" - கேரள அமைச்சர் சிவன்குட்டி விளக்கம்!
கேரளாவில் ஓணம் (Onam) மிகப்பெரிய பாரம்பரிய திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி மன்னரை (மாவேலி) நினைவுகூர்ந்து கேரளாவின் அனைத்து மதத்தினரும் 10 நாள் கொண்டாட்டமாகச் சிறப்பிக்கும் திருவிழா இது.
பூக்களம் - பூக்களால் தரையில் அலங்காரம், ஓணசத்யா - வாழையிலையில் பரிமாறப்படும் சிறப்பு விருந்து, வல்லம் களி - படகுப் போட்டி மற்றும் பாரம்பரிய நடனங்கள், இசை, விளையாட்டுகள் என பலவிதமாகக் கொண்டாடப்படுகிறது.

கேரள அரசு ஒணத்தை மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவாக அறிவித்திருப்பதால், பொதுவாக பத்தாம் நாளான திருவோணம் நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 4, 2025, செப்டம்பர் 5, 2025 அரசு விடுமுறையாகவும், பிற நாள்களான ஆகஸ்ட் 27, 2025 தொடக்கம் முதல் செப்டம்பர் 8, 2025 வரை சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உள்ளூர் விடுமுறையாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு திடீரென ஓணத்திற்கு வழக்கமாக வழங்கப்படும் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாகவும், குறைக்கப்படுவதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி பேசுபொருளாகியிருக்கின்றன.

இதனால் கேரள மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தெளிவுபடுத்தும் விதமாக கேரளாவின் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, ஓணத்திற்கு வழக்கம்போல விடுமுறை அளிக்கப்படும் என்றும் போலியான தகவல்களை நம்பவேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs