சின்னஞ்சிறு கிளியே: எதிர்நீச்சல் தொடர் பாணியில் புதிய தொடர்!
ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பாலிக்கடைக்கு மாற்றம்
ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஓமலூா் நகரில் இருந்து பாலிக்கடை கிராமத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 70 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் செயல்பட்டுவந்தது. இதற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் சுமாா் ரூ. 6 கோடி நிதிபெற்று தந்தாா்.
இதையடுத்து பூமிபூஜை செய்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் ஓமலூா் நகரில் இருந்த ஒன்றிய அலுவலகம், ஓமலூா் அருகே மேச்சேரி செல்லும் சாலையில் 3 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பாலிக்கடை கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.