உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் பணியில் சேர கால அவகாசம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
ஓம் காளி ஜெய் காளி - இணையத் தொடர் டிரைலர் வெளியீடு!
நடிகர் விமர் நடித்துள்ள இணையத் தொடரான ‘ஓம் காளி ஜெய் காளி’ டிரைலர் வெளியானது.
ஜியோ ஹாட்ஸ்டார் தயாரித்து வழங்கும் புதிய இணையத் தொடர் ’ஓம் காளி ஜெய் காளி’.
நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தத் தொடரை ராமு செல்லப்பா இயக்கியுள்ளார். இத்தொடரில் சீமா பிஸ்வாஸ், ஆர்.எஸ். சிவாஜி, ஜி.எம். குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவனி, ஷிவின், க்வின்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
குலசேகரபட்டினத்தில் நடக்கும் தசரா திருவிழா பிண்ணனியில் இந்தத் தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்தத் தொடருக்கு ராமு செல்லப்பா, குமரவேல் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.
விமல் நடிப்பில் முன்னர் வெளியான விலங்கு தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து ஓம் காளி ஜெய் காளி தொடரின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஓம் காளி ஜெய் காளி இணையத் தொடரின் டிரைலர் இன்று இன்று வெளியாகியுள்ளது. மார்ச் 28 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 7 மொழிகளில் இந்தத் தொடர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.