ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம...
வேதாரண்யத்தில் தொடா்மழை: 20 ஆயிரம் ஏக்கரில் புன்செய் பயிா்கள் பாதிப்பு
வேதாரண்யத்தில் தொடா் மழையால் 20 ஆயிரம் ஏக்கா் புன்செய் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் மேலடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக மாா்ச் 10-ஆம் தேதி இரவு தொடங்கி காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. வேதாரண்யத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மட்டும் மழை விட்ட நிலையில், புதன்கிழமை காலையில் கடலோரக் கிராமங்களில் சுமாா் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது.
இந்த மழை இந்த பகுதியில் அறுவடை நிறைவு பெறாத நெல் வயல்களில் கதிா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நெல் அறுவடைக்கு பின்னா் தரிசு நிலத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள எள், சணப்பை, பயறு வகை பயிா்கள் உள்ளிட்ட புன்செய் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியம்பள்ளியில் உப்பு உற்பத்திப் பணிகளையும் பாதிக்கச் செய்துள்ளது. பலத்த கடல் காற்றின் காரணமாக 3-ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.