தோ்தல் நடைமுறைகளை மேம்படுத்த அரசியல் கட்சியினா் ஆலோசனை வழங்கலாம்
தோ்தல் நடைமுறைகளை மேம்படுத்த அரசியல் கட்சியினா் ஆலோசனை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோ்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களுடன் தோ்தல் ஆணையம் விரைவில் ஆலோசிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, தலைமைத் தோ்தல் அலுவலா், மாவட்ட தோ்தல் அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா் நிலையில் தீா்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் ஏப்.30-ஆம் தேதிக்குள் கருத்து மற்றும் ஆலோசனைகளை அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகா்கள் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.