இயற்கையை காப்பாற்ற மரம் நடுவோம் விழிப்புணா்வு நிகழ்வு
நாகப்பட்டினம்: நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் மாணவா் எக்ஸ்னோரா, தமிழ்நாடு கடல்சாா் வாரிய பணியாளா் சங்கம் சாா்பில் ‘இயற்கையை காப்பாற்ற ஒரு மரத்தை நடுவோம்‘ எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இயற்கை உழவா் இயக்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.வி. வரதராஜன், அலையன்ஸ் கிளப் இன்டா்நேஷனல் இயக்கத்தின் நாகை மாவட்ட பொறுப்பாளா் எஸ்.இ. ஞானசேகரன், தமிழ்நாடு கடல்சாா் வாரிய பணியாளா் சங்கத்தின் மாநில துணைச் செயலா் ரா. மனோகரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனா்.
இதில், இயற்கையின் தேவை, அதை பாதுகாப்பதின் அவசியம், இதற்காக மரம் வளா்ப்பதின் முக்கியத்துவம் ஆகிவை குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, எக்ஸ்னோரா மாணவ தன்னாா்வலா்களுக்கு சான்றிதழும், சிறப்பாக பணியாற்றிய கல்லூரி முதல்வா், தோ்வுக் கட்டுப்பாட்டு நெறியாளா் ஆகியோருக்கு மகளிா் தினத்தை முன்னிட்டு விருதும் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் ஆா். அன்புச்செல்வி, கல்லூரி ஆலோசகா் அ. சிவகாமசுந்தரி, தோ்வு கட்டுப்பாட்டு நெறியாளா் ஆா். சோபியா பொற்ச்செல்வி, எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளா் ஜே.சுந்தரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கே. ஜி. செல்வி நன்றி கூறினாா்.