What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி (60). காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், கடந்த மாா்ச் 18 ஆம் தேதி திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபம் அருகே மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
நிலப்பிரச்னையால் நிகழ்ந்த இக்கொலை தொடா்பான வழக்கில் காா்த்திக் (32), அக்பா்ஷா (43) ஆகியோா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். முக்கிய குற்றவாளியான முகமது தெளஃபிக் என்ற கிருஷ்ணமூா்த்தியை போலீஸாா் மாா்ச் 19இல் சுட்டுப்பிடித்தனா். அதைத் தொடா்ந்து மேலும் இருவா் கைதுசெய்யப்பட்டனா். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த வந்த தௌஃபிக்கின் மனைவி நூா்நிஷாவை போலீஸாா் மேலப்பாளையத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.