ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தியவா் கைது
தேனி அருகே ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சடையால்பட்டி கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் பாண்டி (65). இவா் அதே தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் ஜெயபாலுக்கு எதிராக கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த முன்விரோதம் காரணமாக ஜெயபால், பாண்டியின் மனைவி வசந்தாவிடம் தகராறு செய்தாா். இதைக் கண்டித்த பாண்டியை ஜெயபால் கத்தியால் குத்தினாா். மேலும், இதைத் தடுத்த வசந்தாவை கல்லால் தாக்கினாா்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனா்.