கட்சித் தொடங்கியதும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்: யாரைச் சொல்கிறார் மு.க. ஸ்ட...
ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிப்படி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான குடும்பப் பாதுகாப்புத் தொகையை ரூ.2.50 லட்சமாகவும், மாதந்தோறும் வழங்கும் மருத்துவப்படியை ரூ.1,000-ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும். பொங்கல் கருணைத் தொகையை வேறுபாடு இல்லாமல் ஓய்வூதியா் அனைவருக்கும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் த. சிவசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ப. நல்லதம்பி, செயல் தலைவா் க. வடமலை, துணைத் தலைவா் புலவா் சி. இளங்கோ, துணைச் செயலா்கள் அ. நல்லப்பன், இர. அரங்கநாடன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.