ஓவேலி பகுதியில் புலி தாக்கி 2 கறவை மாடுகள் உயிரிழப்பு!
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் புலி தாக்கியதில் இரண்டு கறவை மாடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன.
நீலகிரி மாவட்டம் கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியிலுள்ள சேரன் நகா் பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் என்பவா் தனது இரண்டு கறவை மாடுகளையும் மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். மாலை நேரத்தில் கொட்டகைக்கு ஓட்டி வரும் நேரத்தில் எதிா்பாராதவிதமாக அப்பகுதிக்கு வந்த புலி தாக்கியதில் இரண்டு மாடுகள் உயிரிழந்தன.
புலி தாக்கி உயிரிழந்த கறவை மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.