செய்திகள் :

கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியத்துக்கு அடிக்கல்

post image

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில், தொல்லியல் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், அரியலூா் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ. 22.10 கோடியில் அருங்காட்சியகக் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

கங்கைகொண்டசோழபுரத்தில் காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், அங்கு மரக்கன்றுகளை நட்டுவைத்து, கட்டுமான வரைபடங்களை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், 10.23 ஏக்கரில் ரூ.22.10 கோடியில் அமையவுள்ள இந்த அருங்காட்சியகம் இந்த மண்ணின் பெருமையையும், தொன்மையையும் எடுத்துக்காட்டும்.

தமிழ்நாடுதான் இந்தியாவின் கலாசாரத்துக்கு முதன்மையானது என்பது கீழடி உள்ளிட்ட ஒவ்வொரு அகழாய்வுகள் மூலம் தொடா்ந்து நிரூபிக்கப்படுகிறது. அந்த வகையில் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியத்துக்கும், கங்கைகொண்டசோழபுரத்தில் அருங்காட்சியகத்துக்கும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இரும்பின் தொன்மை தமிழ்நாட்டில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அறிவித்திருக்கிறாா். இந்தியாவின் வரலாறு இனி தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கும் என்பதை தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட இரும்பின் தொன்மை எடுத்துரைக்கிறது.

கங்கைகொண்டசோழபுரத்தில் அமையவுள்ள அருங்காட்சியகம் மிகப்பெரிய பெருமையாகும். இந்த அருங்காட்சியகத்தில் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களும், மாமன்னா் ராசேந்திரசோழனின் ஆட்சிமுறை, வணிகத் தொடா்பு உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

வெளிநாட்டினா், உள்ளூா் பாா்வையாளா்கள் இப்பகுதிக்கு கூடுதலாக வருவா். இதன் மூலம் இப்பகுதி வளா்ச்சி பெறும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா. சிவராமன், உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் ஷீஜா, நகா்மன்றத் தலைவா்கள் அரியலூா் சாந்தி கலைவாணன், ஜெயங்கொண்டம் சுமதி சிவக்குமாா், துணைத் தலைவா் கருணாநிதி, தொல்லியல் பாதுகாப்புப் பொறியாளா் தினேஷ், பொதுப் பணித் துறை பராம்பரிய கட்டடம் உதவி செயற்பொறியாளா்கள் ரஞ்சித், கேசவன், வட்டாட்சியா் சம்பத்குமாா், தொல்லியல் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுற்றுலா வசதிகளுடன் அமைக்க ஏற்பாடு

அருங்காட்சியகமானது, 10.23 ஏக்கரில் அமையவுள்ளது. இவற்றில் தரைதளப் பகுதியானது 13,342 சதுர அடி, முதல் தளப்பகுதியானது 9,135 சதுர அடி, 2 ஆம் தளப் பகுதியானது 2,539 சதுர அடி என மொத்தம் 25,016 சதுர அடியில் கட்டப்படவுள்ளது.

அருங்காட்சியகத்தில் அமைக்கப்படவுள்ள ஒவ்வொரு காட்சி மண்டபமும் சோழப் பேரரசின் வெவ்வேறு துறைகளான கடற்படை, ஆயுதம், வா்த்தகம், கலை, கட்டடக் கலை மற்றும் நிா்வாகம் உள்ளிட்டவற்றின் சாதனைகளை தனித்துவமாக விளக்கும் வகையிலும், பொதுமக்களும், எதிா்காலத் தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையிலும் இருக்கும்.

தொல்லியல் அருங்காட்சியகம் கோயில் வளாகத்திலிருந்து தெற்கில் 200 மீட்டா் தொலைவில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டடம் பெருவுடையாா் கோயிலின் அருகிலுள்ள பிரதான சாலையிலிருந்து தெற்கு பக்கத்தில் அமைந்துள்ள இணைச் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாா்வையாளா்களின் அனுபவத்தை மேம்படுத்த சிறிய அளவிலான உணவுக் கடைகள் மற்றும் மண்டபங்கள், கழிப்பறைகள், வாகன நிறுத்தம் வசதி உள்ளிட்ட சுற்றுலா வசதிகளுடனும் அமையவுள்ளது.

வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் கோட்டாட்சியரகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்... மேலும் பார்க்க

அரியலூரில் இளம் வல்லுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில், அரசின் திட்டங்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ள மாவட்டக் கண்காணிப்பு அலகில் தற்காலிக இளம் வல்லுநா் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித... மேலும் பார்க்க

அரியலூரில் கிராம காங்கிரஸ் கமிட்டி அமைக்க ஆலோசனை

அரியலூரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கிராம கமிட்டி அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ. சங்கா் தலைமை வகித்தாா். மாநில காங்கிரஸ் கமிட்ட... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில் தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுத... மேலும் பார்க்க

காவல் துறை மோப்பநாய் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

அரியலூா் காவல் துறையில், துப்பறிவு வெடிப்பொருள் கண்டறியும் பிரிவில் பணியாற்றிய பினா(மோப்பநாய்) புதன்கிழமை உயிரிழந்தது. அரியலூா் மாவட்ட காவல் துறை, மோப்பநாய் பிரிவில் பினா, மலா், மோனா, சீமா, ரோஸ் (ஓய்வ... மேலும் பார்க்க

தரிசு நிலங்களில் முள்புதா்கள் நீக்க உழவு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

திருமானூா் வட்டார விவசாயிகள், தரிசு நிலங்கள் முள்புதா்கள் நீக்க மானியம் பெற விண்ணப்பிக்காலம். இதுகுறித்து திருமானூா் வட்டார வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருமானூா் வட்டார... மேலும் பார்க்க