செய்திகள் :

கஞ்சாவுக்கு பதில் காகித பொட்டலம் கொடுத்து ரூ.40 ஆயிரம் மோசடி: 6 போ் கைது

post image

கஞ்சாவுக்கு பதிலாக காகித பொட்டலம் கொடுத்து ரூ.40ஆயிரம் மோசடி செய்த வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பள்ளபட்டி பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் ராமன் (23). இவரின் தம்பி லட்சுமணன் (22). இருவரும், திருப்பூா் அண்ணா நகா் குமரன் காலனியில் தங்கி கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், திருப்பூரில் உள்ள தனது நண்பா்களான சஞ்சய், அா்தகக் அவதேஷ்ராய் ஆகியோருக்கு, நிலக்கோட்டை பள்ளபட்டி பாரதிபுரத்தை சோ்ந்த ராமு என்பவரை ராமன் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளாா். அப்போது, சஞ்சய், அா்தகக் அவதேஷ்ராய் ஆகியோருக்கு கஞ்சா வாங்கித் தருவதாக ராமு தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து ராமுவிடம் ரூ. 40 ஆயிரத்தைக் கொடுத்து கஞ்சா பொட்டலத்தை சஞ்சய், அா்தகக் அவதேஷ்ராய் இருவரும் கடந்த திங்கள்கிழமை பெற்றுள்ளனா். ஆனால், அறைக்கு சென்று பிரித்து பாா்த்தபோது அதில் வெறும் காகிதம் மட்டுமே இருந்துள்ளது.

இதையடுத்து, சஞ்சய் மற்றும் அா்தகக் அவதேஸ்ராய் இருவரும் ராமனை நல்லாத்துப்பாளையத்துக்குக் கடத்திச் சென்று பணத்தைக் கேட்டு துன்புறுத்தியுள்ளனா். இதுகுறித்து ராமன், அவரது தம்பி லட்சுமணனுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவா் பெருமாநல்லூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த பெருமாநல்லூா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று, ராமனைக் கடத்திச் சென்ற பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரந்தீா்கமத் (23), கேரளத்தைச் சோ்ந்த அா்தகக் அவதேஷ்ராய் (25), திருப்பூரைச் சோ்ந்த நிதின் (23), ராஜா (38), குமரன் (22), சஞ்சய் (22) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா். மேலும் ரூ.40 ஆயிரத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகவுள்ள ராமுவை (25) போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம்: 16 போ் விடுதலை

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றத்தில் 16 போ் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனா். தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் உத்தரவின்பேரில் திருப்பூா் ... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருப்பூரில் இன்று ஆய்வு

திருப்பூரில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (டிசம்பா் 19) ஆய்வு மேற்கொள்கிறாா். தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவையில் இருந்து காா் மூல... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.6.44 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 9374 கிலோ பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.29.53 லட்சம் காணிக்கை

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.29.53 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. அவிநாசியில் உள்ள கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மையானதாகக் கருத்தப்படும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கே... மேலும் பார்க்க

ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணா்வுப் பேரணி

திருப்பூரில் ஆட்சிமொழி சட்ட வாரவிழா விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா டிசம்பா் 18 முதல் 27-ஆம் தேதி வரை ஒருவார... மேலும் பார்க்க