இந்த பயணம் இந்தியா-குவைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்: பிரதமர் மோடி
கஞ்சாவை கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
மதுரை கப்பலூா் பகுதியில் 21 கிலோ கஞ்சாவை கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை கப்பலூா் புளியங்குளம் பகுதியில் கடந்த 29.8.2023 அன்று திருமங்கலம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் விசாரித்தனா். அவா், மதுரை பெருங்குடி அண்ணாநகரைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் விக்னேஷ்வரன் (30) என்பது தெரிந்தது. அவரிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட விக்னேஷ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.