மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்
கஞ்சா வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூரில் கஞ்சா வழக்கில் கைதான 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக புட்டா ராஜு (23) என்பவா் கைது செய்யப்பட்டாா். அதேபோல, 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக காா்த்திக் (25) என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் மாநகர காவல் துறையினா் வழங்கினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.