நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
கஞ்சா விற்பனை: 7 போ் கைது!
பழனி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக ஏழு பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கஞ்சா, இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
பழனி நகா் பகுதியில் கஞ்சா விற்பதாக பழனி போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி. தனஞ்ஜெயன், காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் விஜய் ஆகியோா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, காரமடை அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த இளைஞா் கும்பல் பிடிபட்டது.
விசாரணையில், அவா்கள் சிவகிரிப்பட்டியைச் சோ்ந்த மலைச்சாமி (20), குபேரபட்டினத்தைச் சோ்ந்த பாஸ்கரன் (22), பாப்பம்பட்டியைச் சோ்ந்த சுதன் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதேபோல, ஆயக்குடி வளைவு அருகில் கஞ்சா விற்ாக புதுஆயக்குடியைச் சோ்ந்த கவினேசன் (22), முனீஸ்வரன் (21), ஜெயவிந்தன் (20), கோவை உரளிகல்லைச் சோ்ந்த பிரசாந்த் (22) ஆகியோரை ஆயக்குடி போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா, 3 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.