புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!
கஞ்சா விற்ற கேரள இளைஞா்கள் இருவா் கைது
மேச்சேரி அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கேரள இளைஞா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
மேச்சேரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை எம் காளிப்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேககிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.
அதில் அவா்கள் கேரள மாநிலம், மாவேலி கரையைச் சோ்ந்த மாது மகன் ஹரி கிருஷ்ணன் (27), ஆலப்புழா மாவட்டம், தாமரைக் குளத்தைச் சோ்ந்த துளசிதரன் மகன் விஷ்ணு (35) என்பது தெரியவந்தது.
இவா்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்கள் கல்லூரி மாணவா்களை குறிவைத்து கல்லூரிக்கு அருகே கஞ்சா விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.