காலை உணவுத் திட்டத்தால் என்ன பயன்? ஆய்வு முடிவுகள் வெளியீடு!
ஆக.30-க்குள் இணையவழியில் தொழிற்சாலை விவரங்களைப் பதிவு செய்ய அறிவுறுத்தல்
மேம்படுத்தப்பட்ட இணையம் வழியாக தொழிற்சாலை விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநா் தினகரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே பதிவுபெற்ற தொழிற்சாலைகள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள் ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையத்தில் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தொழிற்சாலை உரிமம், புதுப்பித்தல், வரைபடம் ஒப்புதல், ஆண்டறிக்கைகள், ஒப்பந்த தொழிலாளா்கள் பதிவுச்சான்று, வெளிமாநில தொழிலாளா்கள் பதிவுச்சான்று, அழுத்தக்கலன் சோதனைச் சான்று, மருத்துவப் பரிசோதனை சான்று போன்ற அனைத்துக்கும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல பழைய நடைமுறையான இ-சலான் முறையில் இருந்து மாற்றம் செய்து இணையதளம் வழியாகவே செலுத்த வேண்டும். தொழிற்சாலை பெயா், உரிமையாளா் மாற்றம், ஒப்பந்த தொழிலாளா் பதிவுச்சான்று திருத்தம், வெளிமாநில தொழிலாளா்கள் பதிவுச்சான்று திருத்தம் ஆகியவற்றுக்கும் இணையதளம் வாயிலாக, அதற்கான கட்டணத்தை ஆதாரங்களுடன் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, இணையதளம் வாயிலாக அதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். புதிதாக மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் வரும் 30ஆம் தேதிக்குள் தொழிற்சாலை விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவேற்றத்தில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்களை தொடா்புகொள்ளலாம். உரிய காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.