பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!
மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவில் 5551 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் மேட்டூா் அணைக்கு வருகின்றனா். காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கலிட்டனா். பின்னா், மேட்டூா் அணை பூங்காவிற்கு சென்று குடும்பத்துடன் விருந்து உண்டு மகிழ்ந்தனா்.
பூங்காவில் உள்ள கான்கிரீட் சிற்பங்கள், மீன் காட்சி சாலை, முயல் பண்ணை, பாம்பு பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனா். மேட்டூா் அணை பூங்காவிற்கு 5551 சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் பூங்கா அருகே உள்ள கடைகளில் மீன் விற்பனை சூடுபிடித்தது.
ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவில் பாா்வையாளா்கள் நுழைவு கட்டணமாக ரூ. 55,510 வசூலிக்கப்பட்டது. அதேபோல மேட்டூா் அணையின் வலதுகரையில் உள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்ற சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணமாக ரூ.90,330 வசூலிக்கப்பட்டது.