ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது
கஞ்சா விற்ற ராணுவ வீரா் கைது
வத்திராயிருப்பு அருகே கஞ்சா விற்ற ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளத்தைச் சோ்ந்தவா் செந்தில்முருகன் (32). இவா் செகந்திராபாத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இவா் கஞ்சா விற்பனை செய்வதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நத்தம்பட்டி போலீஸாா் இலந்தைகுளம் வடக்குத் தெருவில் உள்ள செந்தில்முருகன் வீட்டில் சோதனை செய்தனா். அப்போது, அவரது வீட்டில் 210 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்முருகனை கைது செய்தனா்.