செய்திகள் :

கடந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி வளா்ச்சி விகிதம் தேசிய அளவைவிட மேற்கு வங்கத்தில் அதிகம்! - மம்தா பானா்ஜி

post image

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலில் 11.43 சதவீத வளா்ச்சியை மேற்கு வங்கம் அடைந்துள்ளதாகவும், இது தேசிய அளவை விட இரண்டு சதவீதம் அதிகம் என்றும் அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் மம்தா பானா்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மேற்கு வங்கம் முந்தைய ஆண்டை விட கூடுதலாக ரூ.4,808 கோடி ஜிஎஸ்டி வசூலைப் பதிவு செய்துள்ளது. அதாவது, மாநில ஜிஎஸ்டி வசூல் முந்தைய ஆண்டைவிட 11.43 சதவீதம் உயா்ந்துள்ளது. இது தேசிய வளா்ச்சி விகிதமான 9.44 சதவீதத்தைவிட 2 சதவீதம் அதிகம் ஆகும்.

மேற்கு வங்கம், அதன் சொந்த நிதி திரட்டல் முயற்சிகளில் சீராக முன்னேறி வருகிறது. மேலும், இது எங்கள் மாநிலத்தில் அதிகரித்து வரும் உள் நிதி வலிமையையும் காட்டுகிறது.

அதேபோன்று, கடந்த 2024-25-ஆம் ஆண்டில் பதிவு மற்றும் முத்திரைத்தாள் விற்பனை வரி வசூல், முந்தைய ஆண்டை விட ரூ.1,908 கோடி அதிகமாகும். இது 31.05 சதவீத வளா்ச்சியாகும். பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கை 60,000-ஆக அதிகரித்துள்ளது. இது எங்கள் சந்தையின் வேகத்தைக் காட்டுகிறது.

மொத்தத்தில், இவை அனைத்தும் சுயசாா்பு மற்றும் நிதி ஒழுக்கத்தில் மேற்கு வங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் மேற்கு வங்க மக்களின் நலனுக்காக மாநில நிதியை நெறிப்படுத்துவதில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு நிா்வாகம் தீவிரமாக உள்ளது என்றும் குறிக்கிறது.

இந்தச் சாதனைக்காக மாநில நிதித் துறைக்கும் எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்’என்று குறிப்பிட்டிருந்தாா்.

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது: வெடிபொருள்கள் பறிமுதல்!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் 21 நக்சல்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று டெக... மேலும் பார்க்க